நமக்கு ஏற்பட்ட பல தோஷங்களை நீக்க பிரதோஷ வழிபாடு முக்கியமானது. சிவபெரு மானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந் தாலும் அதில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பிரதோஷ விரதமாகும். மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரை பிரதோஷ காலமாகக் கருதப்படுகிறது. அந்த சமயத்தில் வழிபடுவதால் முற்பிறவி குற்றங்கள் நீங்கும். சகலதோஷமும் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகும். புண்ணியங்கள் சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். கல்வியிலும் மேன்மை அடையலாம். பிரதோஷ வேளையில் எல்லா தேவர்களும், முனிவர்களும் சிவாலயத்தில் ஒன்றுசேர்வதால், பிரதோஷ வழிபாடு எல்லா கடவுள்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட புண்ணியம் தரும் பிரதோஷ வழிபாடு ஏழை எளியவர்கள் செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம்.
இழந்த பதவியைத் திரும்பத் தருவது பிரதோஷ வழிபாடு. தற்காலிலிகப் பணிநீக்கம் அடைந்தவர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணிக்கு முயற்சிப்பவர்கள், அரசியலில் உயர் பதவியை இழந்தவர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாடு செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.
முற்காலத்தில் ஒரு நாட்டை ஆண்ட மன்னன் எதிரிகளால் கொல்லப்பட்டான். எதிரிகள் அவனது நாட்டை வசப் படுத்திக் கொண்டார்கள். கொல்லப்பட்ட அரசனின் மனைவி தனது மகன்களான சசிவரதன், தர்ம குப்தன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சாண்டில்ய முனிவரிடம் தஞ்சம் புகுந்தாள். முனிவரின் ஆலோச னைப்படி மன்னனின் மனைவியும் மகன்களும் பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். நான்கு மாதம் கழித்து எட்டாவது பிரதோஷத்தின் போது சசிவரதன் அமிர்தகல சத்தைப் பெற்று அமிர்தத்தைப் பருகி னான். இளவரசன் தர்மகுப்தன் ஒரு தேவகன்னியை மணந்து, அவளது துணை யுடன் தனது தந்தையைக் கொன்ற எதிரி களைத் தோற்கடித்து, இழந்த நாட் டைத் திரும்பப் பெற்றான் என்று கந்த புராணம் வாயிலாக அறிகிறோம்.
பரிகாரம்-1
இழந்த பதவியைத் திரும்பப்பெற விரும்புவர்கள் நந்தீஸ்வரன் அவதரித்த திருவையாறு சென்றுவர வேண்டும். திருவையாறு தஞ்சாவூரிலிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், அரியலூர் வழித்தடத்தில் உள்ளது. பாடல் பெற்ற திருத்தலமான திருவையாறு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் என்றும் போற்றப்படும். இங்குதான் சிவபெருமான் நந்தி பகவானுக்கு "நந்தீஸ்வரர்' பட்டமளித்து, தமக்குச் சமமான அதிகாரத்தையும், சிவகணங் களில் தலைமைப் பதவியையும், முதல் குருநாதர் என்ற தகுதியையும் அளித்துள் ளார். எனவே பிரதோஷ காலத்தில் இத்திருத்தலம் சென்று வழிபாடு செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம்.
பரிகாரம்-2
முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு பயன்பெறலாம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் எனப் படும். அந்நாளில் வழிபாடு செய்வது அபரிதமான பலன்களைத் தரும்.
செல்: 94871 68174